Published : 19 Oct 2023 06:10 AM
Last Updated : 19 Oct 2023 06:10 AM

தமிழக அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனத்துக்கு ஐநாவின் மதிப்பு மிகு முதலீட்டு ஊக்குவிப்பு விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை: ஐநா அமைப்பின் மதிப்பு மிகு முதலீட்டு ஊக்குவிப்பு விருதை பெற்றுள்ள தமிழக அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவு: புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சார் முதலீடுகளை அதிகரிப்பதில் ஆற்றிய சிறப்பான பணிகளுக்காக ஐநா அமைப்பின் மதிப்புமிகு முதலீட்டு ஊக்குவிப்பு விருதைப் பெற்றுள்ள தமிழக அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனத்துக்கு எனது பாராட்டுகள்.

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் புதுமையான அணுகுமுறைகளும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் கொண்டுள்ள அர்ப்பணிப்பும் உண்மையிலேயே குறிப்பிடத்தக்கவை. அவை பசுமையான எதிர்காலத்துக்கான நமது திராவிட மாடல் அரசின் உறுதியான ஈடுபாட்டைப்பறைசாற்றுவதாக அமைந்துள்ளன.

இந்த பெருமை மிகு மைல்கல்லை அடைந்ததற்காக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் விஷ்ணு மற்றும் கடுமையாக உழைத்து வரும் அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x