Published : 19 Oct 2023 04:14 AM
Last Updated : 19 Oct 2023 04:14 AM

தமிழ்நாட்டில் மணல் குவாரிகள் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் பொன்னை அணைக்கட்டில் ரூ.19.47 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை அமைச்சர் துரைமுருகன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வேலூர்: தமிழ்நாட்டில் மணல் குவாரிகள் தொடர்ந்து செயல்படுவதற்கான வேலைகள் நடைபெறுகின்றன என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் பொன்னை ஆற்றின் குறுக்கே பரமசாத்து கிராமம் அருகே ரூ.17.68 கோடி மதிப்பில் புதிய தடுப்பணை அமையவுள்ள இடத்தையும், பொன்னை அணைக்கட்டில் ரூ.19.47 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் புரைமைப்பு பணிகளையும், மேல்பாடி கிராமம் அருகே ரூ.12.95 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் தரைப்பால பணிகளையும்,

குகையநல்லூர் கிராமம் அருகே ரூ.12.70 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளையும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, மேல் பாலாறு வடிநில கோட்ட சிறப்பு தலைமை பொறியாளர் சண்முகம், செயற்பொறியாளர் ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்த ஆய்வு பணியின் போது நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.35 கோடியில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் விரைவில் முடிக்கப்படும். காட்பாடி புதிய ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

காவிரி குண்டாறு இணைப்பு தொடர்பாக மாயனூரில் மிகப்பெரிய தடுப்பணையை கட்டி இருக்கிறோம். அந்த தடுப்பணையில் இருந்து தான் தண்ணீர் எடுத்து செல்ல வேண்டும். அங்கிருந்து இரண்டு கால்வாய் வெட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு, அரசாங்கத்தின் பணம் இல்லாமல் வெளியில் கடன் வாங்கித்தான் அந்த பணிகளை செய்து வருகிறோம்.

இதற்கிடையில், மூன்றாவது கால்வாய் வெட்டுவதற்கு அடுத்த மாதம் டெண்டர் விடப்படும். மணல் குவாரி தொடர்பாக அவர்கள் ( அமலாக்கத் துறையினர் ) பாட்டுக்கு ஏதோ பார்க் கிறார்கள். மணல் குவாரிகள் தொடர்ந்து செயல்படும் வேலை நடைபெறுகிறது. புதிய மணல் குவாரிகளும் செயல்படும். அதில் ஒன்றும் பிரச்சினை இல்லை’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x