Published : 18 Oct 2023 05:22 AM
Last Updated : 18 Oct 2023 05:22 AM
சென்னை: ஐப்பசி முதல் நாளான இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால், பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பதிவுத் துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சுபமுகூர்த்த தினங்கள் என்று கருதப்படும் நாட்களில் பத்திரப் பதிவுகள் அதிக அளவில் நடைபெறும். எனவே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அந்த நாட்களில் பத்திரப் பதிவுக்கு கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், ஐப்பசி முதல் நாளான அக்.18-ம் தேதியே (இன்று) சுபமுகூர்த்த நாள் என்பதால், கூடுதலாக முன்பதிவு டோக்கன் ஒதுக்குமாறு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கோரிக்கைகள் வந்தன.
இதை ஏற்று, அக்.18-ம் தேதி ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதிலாக 300 டோக்கன்களும் வழங்கப்படுகின்றன. அதேபோல, அதிக அளவில் பத்திரப் பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களில் சாதாரண முன்பதிவில் 100-க்கு பதிலாக 150 டோக்கன்களும், தத்கால் முன்பதிவில் 12-க்கு பதிலாக 16 டோக்கன்களும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT