Published : 18 Oct 2023 06:12 AM
Last Updated : 18 Oct 2023 06:12 AM
சென்னை: தமிழகத்தில் ரூ.127 கோடியில் பல்நோக்கு கடற்பாசி பூங்காவை மத்திய அரசு அமைத்து வருவதாக மாமல்லபுரத்தில் நடந்த சர்வதேச மாநாட்டில் மத்திய மீன்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்தார்.
சர்வதேச மீன்பிடி நிர்வாகத்தில் காலநிலை மாற்றத்தை பிரதானப்படுத்துதல் மற்றும் இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் மீன்வள மேலாண்மை நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் குறித்த சர்வதேச மாநாடு மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டை, மத்திய மீன்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கி வைத்து பேசியதாவது:
தமிழகத்தில் ரூ.127 கோடி மதிப்பில் பல்நோக்கு கடற்பாசி பூங்காவை மத்திய அரசு அமைத்து வருகிறது. பல்வேறு திட்டங்களின் கீழ்,கடந்த 9 ஆண்டுகளில் 61.90 லட்சம் வேலைவாய்ப்புகள் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மத்திய மீன்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT