Published : 18 Oct 2023 06:15 AM
Last Updated : 18 Oct 2023 06:15 AM

யுவமந்தன்' நிகழ்ச்சிகள் மூலம் பிரதமரின் உறுதிமொழிகளை சேர்க்க வேண்டும்: கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ அறிவுறுத்தல்

சென்னை: கல்வி நிறுவனங்கள் ‘யுவமந்தன்’நிகழ்ச்சிகள் மூலம் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் வகையிலான பிரதமரின் 5 உறுதிமொழிகளை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) அறி வுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ஏஐசிடிஇ உறுப்பினர் செயலர் (பொறுப்பு) ராஜேந்திர பி.காக்டே, அனைத்து தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது:

உறுதிமொழி தீர்மானம்: நாட்டின் 76-வது சுதந்திர தினத்தில், 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் வகையில் 5 உறுதிமொழி தீர் மானத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார். இந்த உறுதிமொழிகளின் உள் அர்த்தம், பொருள் மற்றும் அதன் சூழலை இளைய தலைமுறையினர் புரிந்துகொள்ள வேண்டியது அவசிய மாகும்.

5 ஆயிரம் நிகழ்ச்சிகள்: இதையொட்டியே யுவமந்தன் நிகழ்ச்சிகள் கல்வி நிறுவனங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை16 மாநிலங்களில் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட யுவமந்தன் நிகழ்ச்சிகள் கல்வி நிறுவனங்களில் நடத்தப்பட்டுள்ளன. நவம்பர் மாதத்துக்குள் 5 ஆயிரம் யுவமந்தன் நிகழ்ச்சிகளை கல்விநிறுவனங்களில் நடத்தி முடித் திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டுதல் யுவமந்தன் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

எனவே கல்வி நிறுவனங்கள், தங்களது கல்லூரிகளில் யுவமந்தன் நிகழ்ச்சிகளில் ஐக்கிய நாடுகள் மாதிரி கூட்டம், ஹேக்கதான், இளைஞர் பாராளுமன்றம் உள்ளிட்டவற்றை ‘2047-க்கான இந்தியாவின் பயணம் மற்றும் வளர்ந்த இந்தியாவின் நோக்கம்’ எனும்தலைப்பில் நடத்திட வேண்டும். இதன்மூலம் பிரதமர் நரேந்திரமோடியின் வளர்ந்த இந்தியாவுக்கான 5 உறுதி மொழிகளை மாணவர்களிடையே கொண்டு சேர்த்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x