Published : 07 Jul 2014 09:00 AM
Last Updated : 07 Jul 2014 09:00 AM
பி.எஸ்சி. நர்ஸிங், பி.பார்ம். உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த 8 பட்டப் படிப்புகளுக்கு 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் திங்கள்கிழமை முதல் விண்ணப்ப விற்பனை தொடங்குகிறது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளான பி.எஸ்சி. (நர்ஸிங்), பி.பார்ம்., பி.பி.டி., பி.ஏ.எஸ்.எல்.பி. (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நோய் குறியியல்), பி.எஸ்சி. ரேடியாலஜி மற்றும் டெக்னாலஜி, பி.எஸ்சி. ரேடியோ தெரபி டெக்னாலஜி, பி.எஸ்சி. கார்டியோ பல்மோனரி பெர்பியூசன் டெக்னாலஜி, பி.ஓ.டி. ஆகிய படிப்புகள் உள்ளன.
இந்த மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கு 2014 15-ம் கல்வி ஆண்டிற்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் திங்கள்கிழமை (ஜூலை 7) முதல் வரும் 18-ம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வரும் 19-ம் தேதி மாலை 5 மணிக்குள் ’’செயலாளர், தேர்வுக் குழு, எண்.162, ஈ.வே.ரா.பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600010 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
விண்ணப்பத்தை நேரில் பெறு கிறவர்கள், அந்தந்த மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு விண்ணப்ப மனுவுடன் சென்னையில் பணமாக மாற்றத்தக்க வகையில் ரூ.350-க் கான கேட்பு வரைவோலையை (டிடி) இணைத்து கொடுத்து விண் ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். தேசியமயமாக்கப்பட்ட ஏதாவது ஒரு வங்கியில் செயலாளர் தேர்வுக் குழு என்ற பெயரில் வரைவோலை எடுக்கப்பட வேண்டும். வரைவோலை 2014 ஜூலை 6-ம் தேதிக்கு முன்தேதியிட்டதாக இருக்கக் கூடாது. தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் (அருந்ததியர்) மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்த மாணவர்கள் சாதி சான்றிதழின் 2 நகல்களை சமர்ப்பித்து விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்ப படிவங்கள் மற்றும் தகவல் தொகுப்பு ஏட்டை www.tnhealth.org மற்றும் www.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆனால், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கேட்பு வரை வோலையை இணைத்து அனுப்ப வேண்டும். தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் (அருந்ததியர்) மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் கேட்பு வரை வோலை இணைக்கத் தேவை யில்லை.
12-ம் வகுப்பில் தொழில் கல்வி பாடப்பிரிவில் (Vocational Stream) படித்த மாணவர்கள் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT