Published : 16 Oct 2023 06:00 AM
Last Updated : 16 Oct 2023 06:00 AM
நாகப்பட்டினம்: நாகை-காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை பிரதமர் மோடி நேற்று முன்தினம்காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார்.
மொத்தம் 150 பேர் பயணம் செய்யக்கூடிய இந்த கப்பலில், தொடக்க நாளான நேற்று முன்தினம் 50 பேர் மட்டுமே பயணம்செய்தனர். மீண்டும் அங்கிருந்து புறப்பட்ட பயணிகள் கப்பல்நேற்று முன்தினம் மாலை நாகப்பட்டினத்தை வந்தடைந்தது. கப்பலில் வந்திறங்கிய 30 இலங்கை பயணிகளுக்கு, நாகை துறைமுக அலுவலர்கள் இனிப்பு கொடுத்து வரவேற்றனர்.
இந்நிலையில், நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்குச் செல்ல நேற்று 7 பயணிகள் மட்டுமே முன்பதிவு செய்திருந்தனர். இதையடுத்து, பயணிகள் கப்பல் போக்குவரத்து நேற்றுரத்து செய்யப்பட்டது.
பயணிகள் கப்பலை தினமும்இயக்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், எதிர்பார்த்த அளவுக்கு பயணிகள் வருகை இல்லை என்பதால் இனி திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே கப்பல் இயக்கப்படும் என நாகை துறைமுக அதிகாரிகள்தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT ( 4 Comments )
Ticket price is too much Compared with chennai to Andaman ship ..... If the ticket price is normal large number of people utilities the service. Otherwise the service maybe discontinued.
0
0
Reply
Good initiation, Congratulations
0
0
Reply