Published : 17 Jan 2018 12:37 PM
Last Updated : 17 Jan 2018 12:37 PM
டெல்லியில் மருத்துவ மேற்படிப்பு பயின்றுவந்த திருப்பூரைச் சேர்ந்த மாணவர் சரத்பிரபு மர்மமான முறையில் இறந்துகிடந்தார். | விரிவான செய்திக்கு: டெல்லியில் திருப்பூரைச் சேர்ந்த மருத்துவ மாணவர் மர்ம மரணம் |
அவரது மரணம் தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், அவரது சொந்த ஊரில் பெற்றோரும், உறவினர்களும், நண்பர்களும் கதறும் காட்சி காண்போரை நெகிழச் செய்வதாக இருக்கிறது.
சரத்பிரபு (25), திருப்பூரில்தான் பள்ளிப் படிப்பை பயின்றிருக்கிறார். பிளஸ் 2-வில் 1187 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பின்னர், கோவையில் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பயின்றிருக்கிறார். அதன் பின்னர் கேரள மாநிலம் திருச்சூரில் நீட் தேர்வுக்காக பயிற்சி மேற்கொண்டு எம்.டி., படிப்புக்கான நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
டெல்லி பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள யுசிஎம்எஸ் மருத்துவக் கல்லூரியில் எம்டி படித்த வந்த அவர் இன்று காலை மர்மமான முறையில் அவரது அறையில் இறந்து கிடந்தார்.
தொலைபேசியில் தெரிவித்த நண்பர்:
சரத்பிரபுவுடன் அவரது நண்பர் அரவிந்த் என்பவர் தங்கியிருக்கிறார். அவர் இன்று காலை சரத்தின் பெற்றோருக்கு போன் செய்துள்ளார். முதலில், சரத்பிரபு கழிவறையில் விழுந்துவிட்டதாகக் கூறியுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொண்டு சரத்பிரபு இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து சரத்பிரபுவின் தந்தை செல்வமணி (56) விமானம் மூலம் டெல்லி விரைந்துள்ளார்.
'கெட்ட பழக்கமே இல்லை'
சரத்பிரபுவின் வீட்டில் திரண்டுள்ள உறவினர்கள். சரத்பிரபு மிகவும் அமைதியானவர். டீ, காபி, குளிர்பானம்கூட குடிக்கும் பழக்கமில்லாதவர். எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார். அதனால், அவர் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பே இல்லை. இந்த மரணத்தில் சந்தேகம் இருக்கிறது எனக் கூறினர்.
இதற்கிடையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பயின்று மர்மமான முறையில் இறந்த சரவணனின் தந்தை சரத்பிரபுவின் வீட்டுக்கு வந்து அவரது தாயார், சகோதரிக்கும் மற்ற உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT