Published : 09 Oct 2023 06:10 AM
Last Updated : 09 Oct 2023 06:10 AM

தாம்பரத்தில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் மழைநீர்வடிகால் தூர்வாரும் பணிகளுக்காக ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டும், 50 சதவீத பணிகள் கூட இன்னமும் முடிவடையவில்லை.

இதன் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வீடுகளில் தண்ணீர் புகுந்துவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

பல்லாவரம், சேலையூர், சிட்லப்பாக்கம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர் போன்ற பகுதிகளில் உள்ள வடிகால்கள் அனைத்திலும், குப்பை, கழிவுப் பொருட்கள், மண் ஆகியவை தேங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுபோல, தமிழ்நாட்டில் எங்கெல்லாம் தூர்வாரும் பணிகள் இன்னும் முடியவில்லையோ அங்கெல்லாம் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க உடனடி நடவடிக்கை எடுத்து, மக்களை வெள்ளப் பெருக்கிலிருந்து பாதுகாக்க வேண்டும். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x