Published : 08 Oct 2023 07:05 AM
Last Updated : 08 Oct 2023 07:05 AM
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது: டாக்டர் ஈ.ஆர்.சி.டேவிதாருக்கு மரியாதை செய்யும்விதமாக ஒவ்வோராண்டும் அக்டோபர் 7-ம் நாள் நீலகிரி வரையாடு நாளாக அர்ப்பணிக்கிறோம்.
டாக்டர் டேவிதார் தமிழகத்தின் மாநில விலங்கான நீலகிரி வரையாடு குறித்த ஆய்வை 1975 ஆண்டிலேயே முன்னெடுத்த முன்னோடி ஆவார். நீலகிரி வரையாடு திட்டத்தையும் வரும் அக்டோபர் 12-ம் தேதி தொடங்கி வைக்க இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT