Published : 11 Jul 2014 10:50 AM
Last Updated : 11 Jul 2014 10:50 AM
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ‘நான் உங்களுக்கு உதவலாமா’ என்ற மாதிரித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பரிசோதனைக்காகவும் வெவ்வேறு துறை டாக்டர்களை சந்திக்கவும் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்லும் புறநோயாளிகளுக்கு பிரத்தியேகப் பணியாளர்கள் வழிகாட்டுவது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் புற நோயாளிகளாக செல்பவர்கள் பரிசோதனை மற்றும் கருத்து கேட்புக்காக பல்வேறு துறை களுக்கு அனுப்பிவைக்கப்படுவது வழக்கம். இதற்காக மருத்துவமனை வளாகத்தில் ஒரு கட்டிடத்தில் இருந்து இன்னொரு கட்டிடத்துக்கும் வெவ்வேறு மாடிகளுக்கும் செல்லவேண்டியிருக்கும். சில நேரம், வழி புரியாமல் நோயாளிகள் இங்கும் அங்கும் அலைக்கழிக்கப்படும் பரிதாபக் காட்சிகளையும் பார்க்கிறோம்.
இந்தநிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக இல்லை. இங்கு ஆரஞ்சு நிற உடையணிந்த பெண்கள், கனிவாகப் பேசி நோயாளிகளை அழைத்து, ‘உங்களுக்கு என்ன உதவி வேண் டும். பரிசோதனைக்காக ஏதாவது துறைக்கு செல்ல வேண்டுமா. நான் உங்களுக்கு உதவலாமா’ என்று கூறி வழிகாட்டி வருகிறார்கள். இது அங்கு வரும் நோயாளிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுகுறித்து மருத் துவ அதிகாரிகள் கூறியதாவது:
ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் 32 உயர் சிறப்பு துறை கள் உள்ளன. இதன் துணைப் பிரிவுகளும் உள்ளன. 2 கட்டிடங் களில் பல அடுக்குகள் உள்ளன. நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புற நோயாளிகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துசெல்கின்றனர்.
பொதுவாக, இவர்கள் மருத் துவ ஊழியர்களிடம்தான் வழி கேட்பார்கள். பலர் மனிதாபிமானத் துடன் வழி காட்டுவார்கள். சிலர் நோயாளிகளுக்கு உதவாமல் சென்றுவிடுவார்கள். அது அவர் களது பணி இல்லை என்பதால், அவர்களை குறை கூறவும் முடி யாது.
இந்த பிரச்சினையைத் தீர்க் கும் வகையில் ‘நான் உங்க ளுக்கு உதவலாமா’ என்ற மாதிரித் திட்டம் இங்கு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இந்த பணியாளர்களது வேலையே நோயாளிகளுக்கு வழிகாட்டுவது தான். இதற்காக அயல்பணி முறை யில் தொகுப்பூதியத்தில் 12 வழிகாட்டிகள், 3 மேற்பார்வை யாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நோயாளிகளிடம் கனிவாகப் பேசி வழிகாட்டுவது குறித்து இவர்க ளுக்கு 2 வாரப் பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது. இவர்கள் தினமும் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நோயாளிகளுக்கு வழிகாட்டுவார்கள். இதில் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து கூடுதல் வழிகாட்டிகள் நியமிக்கப் படுவார்கள். மற்ற மருத்துவ மனைகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
இவ்வாறு மருத்துவ அதிகாரிகள் கூறினர்.
இதுபற்றி நோயாளி ஒருவர் கூறும்போது, ‘‘ வழிகாட்டுவதற் கென்றே தனி பணியாளர்களை நியமித்திருப்பது பாராட்டுக்குரியது. இடம் தெரியாமல் தவிப்பவர்களை அந்த பணியாளர்கள் அழைத்துச் சென்று உரிய இடத்திலேயே விடுகின்றனர்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT