Published : 05 Oct 2023 06:00 AM
Last Updated : 05 Oct 2023 06:00 AM
சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் வள்ளலார் முப்பெரும் விழாவை கடந்த ஆண்டு அக்.5-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது, முப்பெரும் விழாஇலச்சினை, தபால் உறை மற்றும் சிறப்பு மலர் ஆகியவற்றை வெளியிட்டு, 52 வாரங்களுக்கான விழாக்களில் முதல் வார நிகழ்ச்சிகளையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், ‘வள்ளலார் - 200’ ஓராண்டு தொடர் அறநிகழ்வின் நிறைவு விழா சென்னை மற்றும்வடலூரில் இன்று நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், குன்றக்குடி ஆதீனம்பொன்னம்பல அடிகளார், பேரூர்ஆதீனம் மருதாச்சல அடிகளார்,சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞானபாலய தேசிகர், வேளாக்குறிச்சி ஆதீனம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஆதீனங்கள் கலந்து கொள்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT