Published : 09 Jul 2014 09:00 AM
Last Updated : 09 Jul 2014 09:00 AM
செல்போன் மூலம் ஆங்கிலம், அறிவியல் பாடங்களை கற்றுத் தந்த மாநகராட்சிப் பள்ளி ஆசிரிய ருக்கு மேயர் சைதை துரைசாமி செவ்வாய்க்கிழமை விருது வழங்கினார்.
பழைய வண்ணாரப்பேட்டை யில் உள்ள சென்னை உருது பெண்கள் நடுநிலைப் பள்ளியில் ஜி.ஜரீனா பானு ஆசிரியராக உள் ளார். இவர் ஐந்தாம் வகுப்புக்கு ஆங்கிலம் மற்றும் அறிவியல் கற்று தருகிறார்.
பாடங்களை பிள்ளைகள் எளிதில் புரிந்துகொள்ள கைப் பேசியை தொலைக்காட்சி பெட்டி யுடன் இணைத்து, அதன் மூலம் பாடம் சம்பந்தப்பட்ட வீடியோக் களையும், இணையத்தில் கிடைக் கும் தகவல்களையும் கொண்டு பாடங்களை நடத்தி வருகிறார்.
இதுபோல வகுப்புகளை ஜரீனா பானு எடுக்க காரணமாக இருந்தது ‘ஈசி வித்யா’ என்ற அமைப்பு. இந்த அமைப்பு விளை யாட்டின் மூலம், எளிய முறை யில் கல்வி கற்றுக் கொடுக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. அது தவிர வகுப்புகளில் பயன்படக் கூடிய வீடியோக்களையும் பள்ளிக ளுக்கு அளித்து வருகிறது.
வளரும் தொழில்நுட்பத்தைக் கொண்டு கல்வி கற்று தரும் ஆசிரியர் என்ற வகையில் ஜரீனா பானுவின் முயற்சியை பாராட்டி பியர்சன் ஃபவுன்டேஷன் சார்பில் இவருக்கு “குளோபல் பிரிட்ஜ் ஐடி” விருது வழங்கப்பட்டது. அந்த விருதை மேயர் சைதை துரைசாமி அவருக்கு வழங்கினார்.
பின்னர் ஜரீனா பானு கூறுகை யில், “வீடியோ மூலம் கற்றுத் தருவதால் பிள்ளைகளால் எளிதில் புரிந்துகொண்டு, நினைவில் வைத்துக் கொள்ள முடிகிறது. அறிவியலில் நிலம் மாசடை தல் பற்றிய பாடத்தில் ஆலைகளி லிருந்து வெளி வரும் கழிவுகள் எப்படி ஆற்றிலும், நிலத்திலும் கலக்கின்றன என்பதை வீடியோ வாக பார்க்கும் பிள்ளைகள் நன்கு புரிந்துகொண்டு ஆர்வத்துடன் கற்கின்றனர். அதேபோல ஆங்கில இலக்கணத்தை விளையாட்டு மூலமாக கற்றுத் தருகிறோம். இந்த விருது என்னை மேலும் ஆர்வத்துடன் கற்றுக் கொடுக்க ஊக்கமளிக்கிறது” என்றார்.
‘ஈஸி வித்யா’ அமைப்பின் தலைமை பயிற்சியாளர் சித்ரா தேவி கூறுகையில், “சென்னை யில் கடந்த 3 ஆண்டுகளில் 46 பள்ளி களில் 54 ஆசிரியர்களை ‘ஈஸி வித்யா’ பயிற்றுவித்திருக்கிறது. இதுபோன்ற பயிற்சியின் விளை வாக பள்ளிக்கு வராமல் இருப்ப தும், தேர்வில் தோல்வி அடைவ தும் குறைந்திருக்கிறது. கற்றல் இனிமை நிறைந்ததாக மாறியி ருக்கிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT