Published : 02 Dec 2017 12:05 PM
Last Updated : 02 Dec 2017 12:05 PM
திருக் கார்த்திகை நன்னாளில் வடமாவட்ட கிராமங்களில் மாவளி (கார்த்திகைப் பொறி) கிராம மக்கள் சுற்றினர்.
திருவண்ணாமலையில் உள்ள மலையில் இன்று மாலை மகாதீபம் (கார்த்திகை தீபம்) ஏற்றப்படுகிறது.
இதனை முன்னிட்டு வீடுகளிலும் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். இதனைத் தொடர்ந்து கிராமங்களில் மாவளி ( காத்திகை பொறி) சுற்றுவது வழக்கம்.
இதுதொடர்பாக கிராம மக்கள் கூறியதாவது:
கார்த்திகை மாதம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை பரணி தீபமும், மாலை மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.
அப்போது திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலுார் மாவட்ட மக்களோடு, புதுச்சேரி மக்களும் கார்த்திகை விழாவை மூன்று நாட்களுக்கு கொண்டாடுவோம். முதல் நாள் அண்ணாமலையார் (சிவன்) கார்த்திகை, மறுநாள் விஷ்ணு கார்த்திகை, மூன்றாம்நாள் பிரம்ம கார்த்திகை என கொண்டாடுவோம்.
இந்த மூன்று நாளும் வீடுகளி்ல் தீபமேற்றி வழிபாடுவோம். அழிக்கும் கடவுளான சிவனுக்கு முதல் நாளும், காக்கும் கடவுளான விஷ்ணுவிற்கு இரண்டாவது நாளும், படைக்கும் கடவுளான பிரம்மனுக்கு மூன்றாவது நாளும் கொண்டாடுகிறோம்.
இந்த மூன்று நாட்களும் இரவு நேரங்களில் பனம்பூவை சுட்டு அதை தூளாக்கி துணியில் கட்டி, பனை ஓலை காம்பை மூன்றாக பிளந்து அதில் பனம்பூ கரித்தூள் திணித்த பையை கட்டி நெருப்பு வைத்து, வீட்டில் உள்ளவர்கள் சுற்றுவோம்.
இதை நாங்கள் மாவளி என்றும், திருச்சி , மதுரை பகுதிகளில் கார்த்திகை பொறி என்றும் அழைக்கிறார்கள்.
அப்படி மாவளி(கார்த்திகை பொறி) சுற்றினால் சொறி, சிரங்குகள் வராது என்பது எங்களின் நம்பிக்கை என்று தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT