Published : 28 Sep 2023 06:35 AM
Last Updated : 28 Sep 2023 06:35 AM
ராமேசுவரம்: இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட 17 மீனவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர்.
கடந்த செப் 12-ம் தேதி ராமேசுவரத்தில் இருந்து சென்ற அந்தோணி என்பவரின் விசைப்படகை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைப்பற்றி 8 மீனவர்களை கைது செய்தனர். மேலும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 5 பேர், கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேர் என 17 மீனவர்களை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்தனர்.
இதில் 15 மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுவர்களான இருவர் அச்சுவேலி சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இவ்வழக்கை நேற்று விசாரித்த ஊர்க்காவல்துறை நீதிமன்ற நீதிபதி கஜநிதிபாலன் 17 பேரையும், மீண்டும் இலங்கை எல்லைக்குள் வந்து மீன்பிடித்தால் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
3 விசைப்படகுகளின் உரிமையாளர்களை உரிய ஆவணங்களுடன் அக்.27-ம் தேதி ஆஜராக உத்தரவிட்டார். 17 மீனவர்களும் யாழ் இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT