Published : 27 Sep 2023 04:24 PM
Last Updated : 27 Sep 2023 04:24 PM

கரூரில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவினர் சோதனை

கரூர்: திட்ட அலுவலர் மூக்கையாவுடன் தொடர்புடைய காணியாளம்பட்டி ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்ட நகரமைப்பு மற்றும் ஊரக திட்ட இயக்குநரக அலுவலகத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மூக்கையா. இவர் தற்போது பணிமாறுதலில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார். மூக்கையாவுக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

மூக்கையாவுடன் தொடர்பில் உள்ள கரூர் மாவட்டம் காணியாளம்பட்டி தெற்கில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் ரமேஷ் (35) வீட்டில் கரூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் தங்கமணி தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் இன்று (செப்.27) காலை 7 மணி முதல் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x