Published : 25 Sep 2023 03:59 AM
Last Updated : 25 Sep 2023 03:59 AM

தெற்கு ரயில்வேயில் அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் 35 மேம்பாலம், 110 சுரங்கப் பாதை அமைக்க திட்டம்

சென்னை: தெற்கு ரயில்வேயில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 35 மேம்பாலங்கள் மற்றும் 110 சுரங்கப் பாதைகளை அமைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயின் சென்னை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 6 கோட்டங்களில் மொத்தம் 5,087 கி.மீ. தொலைவுக்கு ரயில் தண்டவாளம் இருக்கிறது. இந்த தண்டவாளத்தை மேம்படுத்தும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் எடுத்து வருகிறது. இதுதவிர, பொதுமக்கள் வசதிக்காக ஆங்காங்கே மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் அமைப்பது போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த வகையில், தெற்கு ரயில்வேயில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 35 மேம்பாலங்கள், 110 சுரங்கப் பாதைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் ஓடும் ரயில்களின் வேகத்தை மணிக்கு 110-ல் இருந்து130 கி.மீ. ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில வழித்தடங்களில் மணிக்கு 110 கி.மீ.வரை வேகத்தில் இயக்கவும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, ரயில்வே பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது. இதற்காக, மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் அமைக்கப்படுகின்றன. பொதுமக்கள் தேவையில்லாமல் ரயில் தண்டவாளத்தை கடப்பதைத் தவிர்க்கவும், நெடுஞ்சாலையின் குறுக்கே தண்டவாளத்தில் ரயில்கள் கடப்பதற்காக, வாகனங்களை நிறுத்தி காத்திருப்பதைத் தவிர்க்கவும் முடியும்.

தெற்கு ரயில்வேயில் அனைத்து ஆள் இல்லாத லெவல் கிராசிங்குகள் நீக்கப்பட்டுள்ளன.மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் அமைப்பதன் மூலமாக, ஆள் உள்ள லெவல் கிராசிங் கேட்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்படும். இவ்வாறு தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x