Published : 25 Sep 2023 06:04 AM
Last Updated : 25 Sep 2023 06:04 AM
கோவை: சைக்கிள் பிராண்ட் அகர்பத்தியின் தயாரிப்பு நிறுவனமான ரங்கா ராவ் சன்ஸ் சார்பில் 75-வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.
இதில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அர்ஜுன் எம்.ரங்கா பேசியதாவது: தமிழகம் தாண்டி உலகளவில் மக்களின் பிராத்தனை தேவைகளில் பூர்த்தி செய்து வருகிறது சைக்கிள் அகர்பத்தி. இதனால் இதன் பயன்பாடு 86 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. 9 இடங்களில் தயாரிப்பு மையங்களை நிறுவியதோடு பிரீமியம் பிராண்டுகளையும் மதிப்பு கூட்டப்பட்ட லியோ, ரிதம், நெய்வேத்தியம் உள்ளிட்ட பெயர்களில் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். இது இந்திய சந்தை மட்டுமின்றி உலகலளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
என் தாத்தா, என்.ரங்கா ராவ் தமிழ்நாட்டில் மார்க்கையன்கோட்டையில் பிறந்தார். இங்குதான் தனது தொழில்முனையும் திறமையை வளர்த்துக்கொண்டு 1948-ல் மைசூரில் ஒரு கிராமத்தில் அகர்பத்தி தொழிலை தொடங்கினார். மொழி, கலாச்சாரம் மற்றும் புவிசார்பைக் கடந்து, ஒரேபோன்று உச்சரிக்கப்படுவதால் அவர் தனது பிராண்டுக்கான சின்னமாக எளிமையான சைக்கிளை தேர்ந்தெடுத்தார். கடைசி வரையிலும் நின்று எரியக்கூடிய, தனித்துவமான வாசனைத் தன்மையைக் கொண்ட உயர்தர அகர்பத்தி குச்சிகளைத் தயாரித்தார்.
ஜெர்மனியில் இருந்து புத்தகங்களை இறக்குமதி செய்து வாசனை திரவியங்களை உருவாக்கும் கலையை கற்றுக்கொண்டார். வீட்டில் வாசனை திரவியங்களை உருவாக்கும் அவரது மரபு 3 தலைமுறைகளுக்குப் பிறகும் தொடர்கிறது. இன்று சைக்கிள் பிராண்ட் உலகின் மிகப்பெரிய அகர்பத்தி உற்பத்தியாளர் என்பதைத் தாண்டி 75 நாடுகளில் மணம் கமழ்கிறது. ஜீரோ கார்பன் தூபம், ஏர்-கேர் போன்ற மிக உயர்ந்த உலகளாவிய தரத்தோடு விளங்குகிறது.
தமிழ்நாடு ஒரு வளமான சந்தை மட்டுமின்றி மக்களின் முன்னேற்றத்துக்கும் சைக்கிள் பங்களிக்கிறது. இங்கு பணியாளர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் பெண்கள். தமிழகத்தில் மட்டும் 3,000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளோம்.
மேலும் 40 திறமையான மாற்றுத்திறனாளி இளம்பெண்கள் பயன்பெறும் வகையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான ஐந்தாண்டு உதவித்தொகை திட்டத்தை அறிவித்துள்ளோம். பக்தர்களை தெய்வீகத்துடன் இணைக்க உதவும் ஒரு ஊடகமாக சைக்கிள் பிராண்ட் மாறிவிட்டது.
தமிழகத்தில் சைக்கிள் ப்யூர் அகர்பத்தியின் பயணம் ஒரு வணிக வெற்றிக்கான கதை மட்டுமல்ல, இந்நிலத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றிய ஒரு பிராண்டின் கதை. இவ்வாறு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment