Published : 20 Sep 2023 11:05 AM
Last Updated : 20 Sep 2023 11:05 AM
விழுப்புரம்: கலைஞர் மகளிர் உரிமைத் தொகைதிட்ட விண்ணப்பங்களின் நிலையை எவ்வாறு அறிந்துகொள் ளலாம் என விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டஆட்சியர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக்கணக்குக்கு ரூ.1,000 அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களின் நிலைகுறித்தகுறுஞ்செய்தி, விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
மேலும் தமிழக முதல்வரின் உதவி மைய எண் 1100-ஐ தொடர்பு கொண்டும் விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளலாம். அனைத்து இ-சேவை மையங்களிலும் தங்களின் விண்ணப்பத்தின் நிலைகுறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் 'kmut.tn.gov.in/login.html' என்ற இணையதள முகவரி யில் தங்கள் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளலாம். ஆட்சியர் அலுவலகம், அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவல கம், அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் இத்திட்டத் துக்கு பிரத்யேகமாக செயல்பட்டு வரும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட உதவி மையத்தை அணுகி விண்ணப்பத்தின் நிலையினை தெரிந்து கொள்ளலாம்.
மேலும், இது தொடர்பாக மேல்முறையீடு செய்ய விரும்பினால் குறுஞ்செய்தி பெறப்பட்ட 30 நாட்களுக்குள் அனைத்து இ-சேவை மையங்களிலும் கட்டணமின்றி வருவாய் கோட்டாட் சியருக்கு மேல்முறையீடு செய்ய லாம். இ-சேவை மையத்தில் மேல்முறையீடு செய்ய எவ்வித கட்டணமும் செலுத்த தேவை யில்லை.
மேலும், வங்கிக் கணக் கில் வரவு வைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட தொகை ரூ.1,000-ஐ தங்களின் விருப்பப்படி வங்கியிலிருந்து எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ரூ.1,000-ஐ தங்களின் விருப்பப்படி வங்கியிலிருந்து எப்போது வேண்டு மானாலும் பெற்றுக்கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...