Published : 12 Sep 2023 08:40 AM
Last Updated : 12 Sep 2023 08:40 AM

ரூ.25 கோடி மதிப்பு நிலம் அபகரிப்பு: கட்டுமான அதிபர், மனைவி மீது நடிகை கவுதமி புகார்

சென்னை: நடிகை கவுதமி சென்னை காவல் ஆணையரிடம் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

125-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்களில் நடித்துள்ளேன். கடந்த 2004-ம் ஆண்டு எனது மகளுக்கு 4 வயதாக இருக்கும்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டேன். நான் சினிமாவில் 17 வயது முதல் நடித்து சேமித்த பணத்தின் மூலம் ஸ்ரீபெரும்புதூரில் நிலம் வாங்கினேன். தற்போது இந்த இடத்தின் மதிப்பு ரூ.25 கோடி.

எனது மகளின் பராமரிப்பு செலவு மற்றும் எனது மருத்துவ சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இடத்தை விற்பனை செய்ய முடிவு செய்தேன். இந்த நேரத்தில் கட்டுமான நிறுவன அதிபர் அழகப்பன் என்பவர் தொடர்பு கொண்டு எனக்குச் சொந்தமான நிலத்தை விற்றுத்தருவதற்கு உதவி செய்வதாகக் கூறினார்.

நான் அவரை முழுமையாக நம்பினேன். எனவே எனது நிலத்தை விற்பனை செய்து தருவதற்கான அதிகாரத்தை (பவர் ஆஃப் அட்டர்னி) அழகப்பனுக்கு வழங்கினேன். அந்த சமயத்தில் என்னிடம் பல்வேறு பத்திரங்களில் கையெழுத்து பெற்றுக்கொண்டார். இந்த பத்திரங்களைத் தவறான வழியில் பயன்படுத்த மாட்டேன் என்று உத்தரவாதம் அளித்தார். அதே வேளையில் எனது கையெழுத்தை மோசடியாகப் போட்டும், போலி ஆவணங்களைத் தயாரித்தும் அழகப்பனும், அவரது மனைவி மற்றும்குடும்பத்தினர் எனது இடத்தைஅபகரித்து மோசடி செய்துள்ளனர். இதுபற்றி கேட்டால் கொலைமிரட்டல் விடுக்கின்றனர்.

எனவே, எனக்குச் சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான இடத்தைஅபகரித்த அழகப்பன், அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது இடத்தை மீட்டுத் தர வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x