Published : 01 Dec 2017 11:54 AM
Last Updated : 01 Dec 2017 11:54 AM

முதுகெலும்பற்ற அதிமுக; அச்சுறுத்தி பயன்படுத்திக் கொள்ளும் பாஜக: வைகோ சாடல்

முதுகெலும்பற்ற நிலையில் உள்ள அதிமுக அரசை மனதளவில் பயமுறுத்தி தனக்கு சாதகமானதை மத்திய அரசு செய்து வருகிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.

திருப்பூரில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த வைகோ செய்தியாளார்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மணல் குவாரிகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை மதிமுக வரவேற்கிறது . தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யாமல் தமிழக நீர் நிலைகளை பாதுகாத்து மாற்று மணலுக்கான ஏற்பாட்டினை செய்ய வேண்டும்.

தமிழகத்தின் வாழ்வாதாரத்தினை கெடுக்கும் திட்டத்தினை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது .குறிப்பாக மீத்தேன் , நியூட்ரினோ திட்டத்தால் இந்திய பொருளாதாரம் வளர்ச்சியடையும் ஆனால் தமிழகம் பாலைவனமாகிவிடும்.

முதுகெலும்பற்ற நிலையில் உள்ள அதிமுக அரசை மனதளவில் பயமுறுத்தி தனக்கு சாதகமானதை மத்திய அரசு செய்து வருகிறது.

அள்ளித்தெளித்த அவசரகோலமாக அறிவித்த இந்த ஜி.எஸ்.டியால் தொழில் முடக்கப்பட்டு, தொழிலாளர்கள் வேலையிழந்த நிலையில் அவற்றை மீட்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x