Published : 11 Sep 2023 06:49 AM
Last Updated : 11 Sep 2023 06:49 AM
சென்னை: பள்ளி மாணவர்களுக்கான இன்ஸ்பயர் விருதுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகள் இடையே அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் ‘இன்ஸ்பயர்’ விருது வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களின் ஒரு லட்சம் புதுவிதமான சிந்தனைகள் தேர்வு செய்யப்பட்டு ரூ.10,000 உதவித்தொகை அளிக்கப்படும். இதைக் கொண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை மாவட்ட, மாநில, தேசிய அளவில் நடத்தப்படும் கண்காட்சிகளில் பங்கேற்க செய்து சிறந்த படைப்புக்கு விருது வழங்கப்படுகிறது.
அதன்படி நடப்பாண்டு ‘இன்ஸ்பயர்’ விருதுக்கான உதவித்தொகை விண்ணப்பங்கள் இணையவழியில் பெறப்பட்டு வந்தன. இதற்கான அவகாசம் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. ஆனால், மாணவர்கள் நலன் கருதி விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப்டம்பர்30-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழகத்தில் உள்ளஅனைத்து அரசுப் பள்ளி மாணவர்களும் இதில் பங்கேற்க வழிசெய்யவேண்டுமெனத் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT