Published : 10 Sep 2023 02:32 PM
Last Updated : 10 Sep 2023 02:32 PM
காரைக்குடி: ஜனநாயகமும், எதிர்க்கட்சிகளும் இல்லாத நாடாக இந்தியா மாறி விடுமோ என்ற அச்சம் நிலவுவதாக மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
காரைக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ஜி-20 மாநாடு வெற்றி பெற வாழ்த்துகிறோம். ஆனால், குடியரசுத் தலைவரின் விருந்து நிகழ்ச்சியில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப் பில்லை. இது ஜனநாயக விரோதம். இந்தியா ஜனநாயகமும், எதிர்க் கட்சிகளும் இல்லாத நாடாக மாறிவிடுமோ என்று பொதுமக்களிடம் அச்சம் நிலவுகிறது.
இந்தியா அதாவது பாரத் என்பது, மாநிலங்கள் அடங்கிய ஒன்றியம் என்று தான் அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றுவதில் பாஜகவுக்கு என்ன நோக்கம் என்று புரிய வில்லை. நல்ல நோக்க மாக இருந்தால் இரு வார்த்தைகளையும் எழுதலாம். ஆங்கிலத்தில் இந்தியா என்றும், இந்தியில் பாரத் என் றும் எழுதலாம்.
நாங்கள் பாரத்துக்கு விரோதிகள் அல்ல. ஆனால், பாஜகதான் இந்தியாவுக்கு விரோ தமாக நடந்து கொள்கிறது. `ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது மாநில அரசுகளை பலவீனப் படுத்தவே கொண்டு வரப்படுகிறது. அதற்கு அரசியல் சாசனத்தில் குறைந்தது 5 திருத் தங்களை மேற்கொள்ள வேண்டும். ஆனால், அதைச் செய்ய முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.
சனாதன தர்மம் என்பது தமிழகத்தில் சாதிய வாதம், பெண் இழிவு என்றும், வட மாநிலங்களில் இந்து மதம் என்றும் புரிந்து கொள்ளப்படுகிறது. காங்கிரஸைப் பொறுத்தவரை எம்மதமும் சம்மதம்தான். இந்த சர்ச்சையில் நாங்கள் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. இண்டியா கூட்டணியில் மாநில அளவில்தான் தொகுதிப் பங்கீடு நடைபெறும்.
அது சுமுகமாக முடியும். கேரளாவில் ஏறத்தாழ முடிந்து விட்டது. பிஹாரைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டாம் என லாலு பிரசாத் கூறி விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT