Published : 10 Sep 2023 10:26 AM
Last Updated : 10 Sep 2023 10:26 AM
சென்னை: ஜோலார்பேட்டை- கே.எஸ்.ஆர் பெங்களூரு மார்க்கத்தில், ஜோலார்பேட்டை - சோம நாயக்கன்பட்டிக்கு இடையே சுரங்கப் பாதை பணி காரணமாக, 14 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
சென்னை சென்ட்ரல் - திருப்பதிக்கு செப்.12, 13, 14, 15, 20 21, 23, 25 ஆகிய தேதிகளில் மாலை 4.35 மணிக்கு இயக்கப்படும் ரயில் (16203), திருப்பதி - சென்னை சென்ட்ரலுக்கு செப்.12, 13, 14,15, 21, 22, 24, 25 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் விரைவு ரயில் (16204),
சென்னை சென்ட்ரல் - மைசூருக்கு செப்.12, 13, 14, 20, 21, 23, 24 ஆகிய தேதிகளில் இரவு 9.15 மணிக்கு இயக்கப்படும் காவிரி விரைவு ரயில் (16021), மைசூரு - சென்னை சென்ட்ரலுக்கு செப்.13, 14, 15, 21, 22, 24, 25 ஆகிய தேதிகளில் இரவு 9 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் (16022) உட்பட 14 ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
இது தவிர, ஆறு ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளன. சென்னை சென்ட்ரல் - கேஎஸ்ஆர் பெங்களூருவுக்கு செப்.12-ம் தேதி இரவு 10.50 மணிக்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில் (12657) ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும். இது தவிர, ஆறு ரயில்கள் குறிப்பிட்ட நாட்களில் நேரம் மாற்றி இயக்கப்படவுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT