Published : 05 Sep 2023 06:50 AM
Last Updated : 05 Sep 2023 06:50 AM
சென்னை: வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிக்காக, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துடன் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு தொழில்நுட்ப மையம், முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துடன், தொழில்நுட்ப வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஆராய்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இதன்மூலம் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தில் அறிவு சார் பங்குதாரர் என்ற அடிப்படையில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவுவதுடன், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்நிறுவனங்களுக்கு சிறந்த வளர்ச்சிக்கான வழிகாட்டுதல்களை வழங்கும்.
இந்த நிகழ்வில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment