Published : 28 Jul 2014 12:12 PM
Last Updated : 28 Jul 2014 12:12 PM

ஜனாதிபதி அளித்த இப்தார் விருந்தில் மோடி பங்கேற்கவில்லை: ஞானதேசிகன் கவலை

ஜனாதிபதி அளித்த இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்ளாதது காங்கிரஸ் கட்சிக்கு கவலை அளிக்கிறது. எம்மதமும் சம்மதம் என்பதுதான் அரசியல் சட்டத்தின் கொள்கை என்பதனை மோடி அரசு உணர்ந்து செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ஞானதேசிகன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்: "புனித இஸ்லாம் வலியுறுத்திய நோன்புப் பெருநாட்களைத் தொடர்ந்து இன்று ஈகைத் திருநாளாக இஸ்லாமியப் பெருமக்களால் போற்றி வணஙக்ப்படும் ரம்ஜான் பண்டிகை நாடெங்கும் உவகையோடு கொண்டாடபப்டுகிறது.

அண்ணல் நபிகள் நாயகம் அருளிய அறநெறிக்கேற்ப ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான முப்பது நாட்கள் நோன்பிருந்து வசதி படைத்தோரும் பசியின் கொடுமையை உணர்ந்து ஏழை எளியோருக்கு உதவிடும் 'ஸஹாத்” எனும் கடமையை நிறைவேற்றும் உன்னத விழா 'ரம்ஜான்”.

இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் கல்வி, பொருளாதார மேம்பாட்டிற்கு முதல் பிரதமர் பணடித நேரு அவாக்ள் காலம் தொடங்கி அன்னை இந்திரா காந்தி, தலைவர் ராஜீவ் காந்தி, ஆகிய பிரதமர்களின் காலத்திலும் பல்று திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

அதைத் தொடர்ந்து அவர்களது வழிநின்று அன்னை சோனியா காந்தி அவர்களது வழிகாட்டுதலில், பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான முந்தைய மத்திய அரசு அம்மக்களுக்கென்று தனி அமைச்சகம், தனி அமைச்சரை உருவாக்கியது. மேலும் அவர்களது சமூகப் பொருளாதார நிலையைக் கண்டறிய மாண்புமிகு. நீதியரசர் மிஸ்ரா தலைமையில் கமிஷன அமைக்கபப்ட்டது. அக்கமிஷன் பரிந்துரையை ஏற்று சிறுபான்மை மக்களின வாழ்வு உயர்வுக்கு 15 அம்சத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது. அவாக்ளது நலனுக்கெனறு; 165 பணிகளுக்கு பல்லாயிரம் கோடி செலவிடப்பட்டது.

சிறுபான்மையினருக்கு காவலாக இருக்கும் காங்கிரஸ் பேரியக்கம் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தது. இது ஜனநாயகத்தில் மக்களின் தீர்ப்பு என்று ஏற்றுக் கொண்டாலும் மோடியின் அரசு மத ஒற்றுமையும், மதசார்பின்மையையும் கடைபிடிக்கும் என்று மக்கள் நம்பினார்கள். பாஜ.க.வினா; சானியா மிர்சாவை பாகிஸ்தானின் மருமகள் என்று விமர்சிக்கின்றனர். ஜனாதிபதி அளித்த இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்ளாதது காஙகிரஸ் கட்சிக்கு கவலை அளிக்கிறது. மத நல்லிணக்கம் அரசுகளின் அடிப்படை கடமை. எம்மதமும் சம்மதம் என்பதுதான் அரசியல் சட்டத்தின் கொள்கை என்பதனை மோடி அரசு உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்நன்நாளில், இறைவனின் இறுதித் தூதரான அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் உலகுக்கு; போதிதத் மனிதநேயம், நல்லொழுக்கம், அன்பு, அமைதி, சமாதானம், சகோதரததுவம் ஆகிய உயரிய நெறிகளை ஏற்று வாழ்ந்து, நாட்டில் மத, இனப் பிரிவுகளிடையே ஒற்றுமை, ஒருமைப்பாடு மிளிர்ந்து, வன்முறைகள் ஒழிந்து; நல்லிணக்கம் உருவாக அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம், உயர்வோம் என்று கூறி அனைத்து; இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும், எனது மனமுவந்த ரம்ஜான் நல்வாழத்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x