Published : 06 Jul 2014 01:20 PM
Last Updated : 06 Jul 2014 01:20 PM
17-வது ஆண்டாக நெய்வேலிப் புத்தகக் காட்சி கடந்த 4-ம் தேதி தொடங்கி வரும் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
தமிழக அளவில் நடத்தப்படும் இப்புத்தகக் காட்சியில் தமிழகத்தின் தலைசிறந்த 150 முன்னணி பதிப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
புத்தகக் காட்சி நிகழ்வை ஒட்டி தினந்தோறும் ஒரு எழுத்தாளர், ஒரு பதிப்பாளர் கவுரவிக்கப்படுவது இப்புத்தகக் காட்சியின் சிறப்பு. நலிவடைந்துவரும் பதிப்புத்துறையை ஊக்கப் படுத்தும் விதமாக ஒவ்வொரு புத்தகக் காட்சியின்போது, ஒரு பதிப்பாளர் கவுரவிக்கப்படுவதும் 17 ஆண்டுகளாக தொடர்கிறது.
வாசிப்புத் தன்மையை அதிகரிக்க தினம் ஒரு நூல் புத்தகக் காட்சிக் குழுவின ரால் வெளியிடப்படுகிறது.
பள்ளி மாணவர்கள் மத்தியில் புத்தகக் காட்சியைக் கொண்டு செல்லும்விதமாக நெய்வேலி கல்வித் துறையும், பாரத ஸ்டேட் வங்கியும் இணைந்து மாவட்ட அளவிலான விநாடி-வினா போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்குகிறது.
நெய்வேலி புத்தகக் காட்சிக் குழு மாநில அளவிலான சிறுகதைப் போட்டியையும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவியருக்கு இடையே கட்டுரைப் போட்டி களையும் நடத்தி பரிசுகளை வழங்கிவருகிறது.
ஆண்டுதோறும் இளம் இயக்குநர்களின் திறமைகளை வெளிக்கொணரும்விதத்தில் குறும்படப் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்குகிறது. இந்த ஆண்டு ஊழல் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடத்தில் எடுத்துச் செல்லும்விதமாக என்எல்சி கண்காணிப்புத்துறை ஊழல் ஒழிப்புத் தொடர்பான குறும்படப் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கவுள்ளது.
புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களிடையே ஏதேனும் ஒரு தலைப்பில் ஓவியம், பேச்சு, நடிப்பு உள்ளிட்ட உடனடி திறனறிதல் போட்டிகளை நடத்தி பரிசு வழங்கிவருவதும் இப்புத்தகக் காட்சியின் சிறப்பு.
பள்ளி மாணவர்களுக்கு இலவசம்
கடலூர், விழுப்புரம், திருவண் ணாமலை மற்றும் புதுச்சேரி உள் ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பள்ளி மாணவ, மாணவியர் களுக்கு இலவசமாக அனுமதி அளிக்க புத்தகக் காட்சிக் குழுவினர் முடிவுசெய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT