Published : 30 Dec 2017 10:45 AM
Last Updated : 30 Dec 2017 10:45 AM
தேசிய பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரவை சார்பில் விழுப்புரத்தில் இன்று காலை மாநில அளவிலான மாரத்தான் போட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுப்பிரிவினரான ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியாக நடத்தப்பட்டது. இப்போட்டியில் 2500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். .
விழுப்புரம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியை காண வந்திருந்த பா.ஜ.க தேசியச் செயலாளர் எச் .ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது;,
இந்த மினி மராத்தான் போட்டியில் 2500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். நேதாஜி சிலை நிறுவ ஆட்சியரிடம் அனுமதிவேண்டி கோரிக்கை வைத்துள்ளோம். மறைந்த தலைவர்கள் இல்லம் நினைவிடம் ஆக்குவது போல, ஜெயலலிதா இல்லமும் அப்படிச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தம்பிதுரை பாஜகவை தொடர்ந்து எதிர்த்து வருகிறார். இதனை அதிமுக பார்த்துகொள்ளும். ஆங்கில புத்தாண்டை நள்ளிரவில் தேவாலயங்களில் கொண்டாடுவது மகிழ்ச்சியே. கிறிஸ்துவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால் ஆகம விதிகளுக்குப் புறம்பாக நள்ளிரவு தொடங்கி காலை வரை கோயில்களை திறப்பது புறம்பானது. டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு எந்தக் கோயிலும் திறந்து இருக்ககூடாது என்று அறநிலையத்துறை ஆணை பிறப்பிக்கவேண்டும்.
ஆந்திரா அரசு நள்ளிரவில் கோயிலை திறந்து இருக்ககூடாது என்று உத்தரவிட்டுள்ளது. சூரிய உதயத்திற்குப் பிறகு,, கோயிலில் வழிபடுவது தவறில்லை. நீதிமன்றம் இந்த ஆண்டு மட்டும் அனுமதி அளித்து ஜனவரி 8ம் தேதி கூடி முடிவெடுப்போம் என்று கூறியுள்ளது. ஆர்.கே நகர் தேர்தலில் பணநாயகம் வென்றுள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT