Published : 01 Dec 2017 03:27 PM
Last Updated : 01 Dec 2017 03:27 PM
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தபின்னர் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
வரும் 21-ம் தேதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஆர்.கே.நகரில் கடந்த மார்ச் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது ஓபிஎஸ், ஈபிஎஸ் வெவ்வேறு அணிகளில் இருந்தனர். எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்தார்.
இப்போது நிலைமை அப்படியே மாறிவிட்டது. சின்னத்தை இழந்து, கட்சியில் அதிகாரத்தை இழந்து, ஆதரித்துவந்த எம்.பி.க்களையும் இழந்து டிடிவி தினகரன் தனித்து போட்டியிடும் சூழல் உருவாகியிருக்கிறது.
இந்நிலையில், இன்று (டிசம்பர் 1-ம் தேதி) அதிமுக சார்பில் மதுசூதனன் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு அவர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் பாண்டியராஜன், முன்னாள் எம்.பி., கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்தபோது அமைச்சர் ஜெயக்குமார் உடன் இருந்தார். ஆனால், அவர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு வரவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT