Published : 30 Aug 2023 05:58 AM
Last Updated : 30 Aug 2023 05:58 AM
சென்னை: திமுக சட்டத் துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. நேற்று வெளியிட்ட அறிக்கை:
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா, புதிய உறுப்பினர் சேர்க்கை, புதிய நிர்வாகிகள் அறிமுகம் தொடர்பாக, திமுக வழக்கறிஞரணி மாவட்டத் தலைவர், துணைத் தலைவர், அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் செப். 2-ம் தேதி காலை சென்னை எழும்பூரில் உள்ள இம்பிரீயல் ஹோட்டல் ஃபயஸ் மகாலில் எனது தலைமையில் நடைபெற உள்ளது.
கட்சியின் முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான எஸ்.ரகுபதி, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான பி.கே.சேகர்பாபு, விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளர் தயாநிதிமாறன் எம்.பி. சட்டத் துறைத் தலைவர் மூத்த வழக்கறிஞர் இரா.விடுதலை ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.
இதில், திமுக சட்டத் துறை நிர்வாகிகள், தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞரணி நிர்வாகிகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT