Published : 29 Aug 2023 06:04 AM
Last Updated : 29 Aug 2023 06:04 AM

திருவள்ளுவர் விருது உள்ளிட்ட 75 விருதுகளுக்கு அக்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்: தமிழ் வளர்ச்சித் துறை அறிவிப்பு

சென்னை: திருவள்ளுவர் விருது உள்ளிட்ட 75 விருதுகளுக்கு அக்.15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2024-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2023-ம்ஆண்டுக்கான 74 விருதுகளுக்கும் தமிழறிஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திருவள்ளுவர் திருநாளில்வழங்கப்படும், திருவள்ளுவர்,மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், தமிழ்த்தென்றல் திருவிக, கி.ஆ.பெ.விசுவநாதம், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா ஆகிய விருதுகள் தலா ஒருவருக்கு வழங்கப்படும்.

விருது பெறுவோருக்கு ரூ.2 லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை வழங்கப்படும். இலக்கிய மாமணி விருது3 பேருக்கு வழங்கப்படும். இதில்,ரூ.5 லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கம், தகுதியுரை பொன்னாடை அடங்கும். தமிழ் வளர்ச்சித் துறைசார்பில் தமிழ்த்தாய் விருது ஒருவருக்கு ரூ.5 லட்சம், கேடயம், தகுதியுரையுடன் வழங்கப்படும்.

அதேபோல் கபிலர், உ.வே.சா., கம்பன், சொல்லின் செல்வர், உமறுப்புலவர், ஜி.யு.போப், இளங்கோவடிகள், சிந்தனைச் சிற்பிசிங்காரவேலர், அயோத்திதாச பண்டிதர். மறைமலையடிகளார், வள்ளலார், காரைக்கால் அம்மையார், அம்மா இலக்கிய விருது ஆகியவை தலா ஒருவருக்கு ரூ.2லட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடையுடன் வழங்கப்படும். மொழிபெயர்ப்பாளர் விருது 10 பேருக்கு வழங்கப்படும். சி.பா. ஆதித்தனார் விருது, 3பேருக்கு தலா ரூ.2 லட்சம், கேடயம், தகுதியுரை, பொன்னாடையுடனும், தமிழ்ச்செம்மல் விருது 38 மாவட்டங்களிலும் தலா ஒருவருக்கு ரூ.25 ஆயிரம், தகுதி யுரையுடன் வழங்கப்படும்.

விருதுக்கு, http://awards.tn.gov.in என்ற இணைய தளத்தின்வழியாகவோ அல்லது தமிழ்வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சிஇயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை- 8 என்ற முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவோ, அக்.15-ம்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

கூடுதல் விவரமறிய விரும்புவோர் 044- 28190412, 044 – 28190413 ஆகிய தொலைபேசி எண்களை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x