Published : 28 Aug 2023 10:54 PM
Last Updated : 28 Aug 2023 10:54 PM
மதுரை: உயர் நீதிமன்ற ஆணையை நிறைவேற்றி அரசு மருத்துவர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்களை உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று மதுரை அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு மருத்துவர்கள் சங்கத்தலைவர் கே.செந்தில் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் டாக்டர் எம்.ரமேஷ், மருத்துவ பேராசிரியர்கள் கல்யாணசுந்தரம், செல்வராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். டாக்டர் செந்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி அதனை நிறைவேற்றி அரசு மருத்துவர்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டிய அலவென்சுகள், ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்.
அரசு ஆரும்ப சுகாதாரநிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் என தமிழகம் பல்வேறு மருத்துவ நிலைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் ஊதிய உயர்வு வேண்டிய நான்காண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அதன்பிறகு கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி அரசு ஆணைப் பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணை கடந்த 2 ஆண்டாக தமிழக அரசால் அமல்படுத்தாமல் உள்ளது.
கரோனா பெருந்தொற்று, இயற்கை இடர்பாடுகள் என அரசு மருத்துவர்களின் சவாலான பணித்தன்மையை கருத்தில் கொண்டு அவர்களின் நலன் காக்கும் பொருட்டு தமிழக முதல்வர் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே இந்த அரசாணையை பிறப்பித்தார். சிறப்பு மருத்துவர்கள் மற்றும் பொது மருத்துவர்கள் இடையேயான ஊதிய நிலைகளில் உள்ள முரண்பாடுகளை காரணம் காட்டி அரசு மருத்துவர்களின் காலமுறையற்ற ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கையை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மேற்படிப்பு, பணியிட சவால் போன்றவற்றை கருத்தில் கொண்டு அலவென்ஸ், ஊதிய உயர்வு வழங்கும் இந்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இவ்வரசாணையை அமல்படுத்த பல்வேறு நிலைகளில் பல மாவட்டங்களில் பலமுறை வலியுறுத்தியும் இதுநாள் வரை யாருக்கும் உரிய பணப்பலன்கள் கிடைக்கவில்லை’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT