Last Updated : 07 Dec, 2017 12:08 PM

 

Published : 07 Dec 2017 12:08 PM
Last Updated : 07 Dec 2017 12:08 PM

அராஜகத்திலிருந்து என் அன்பான நாட்டை காப்பாற்றுங்கள்: விஷால்

அராஜகத்திலிருந்து என் அன்பான நாட்டை காப்பாற்றுங்கள் என்று விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தார் விஷால். முதலில் அவருடைய மனு நிராகரிக்கப்பட்டது, பின்னர் ஏற்கப்பட்டு பிறகு மீண்டும்  நிராகரிக்கப்பட்டது.

தற்போது தேர்தல் ஆணையமும் வேட்புமனு நிராகரிப்பை பொருத்தவரை, தேர்தல் அதிகாரியின் முடிவே இறுதியானது என தெரிவித்திருக்கிறது.

இந்த அறிவிப்பு குறித்து விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஜனநாயகம் அதன் தலையை மீண்டும் உயர்த்துவதற்காக காத்திருக்கிறது. கடவுளே இங்கு நடக்கும் அராஜகத்திலிருந்து என் அன்பான நாட்டை காப்பாற்றுங்கள்

இவ்வாறு விஷால் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x