Published : 08 Dec 2017 10:46 AM
Last Updated : 08 Dec 2017 10:46 AM
விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று பிற்கபல் இளைஞர் ஒருவர் எஸ்.பி.யை சந்திக்க அனுமதி கேட்டுள்ளார். பின்னர் எஸ்.பி ஜெயகுமாரை சந்தித்த அவர் ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்து நீட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த எஸ்.பி அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் விழுப்புரம் அருகே மண்டகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த உலகநாதன் மகன் ராஜீவ்காந்தி(25) என்பதும், இவரது தந்தை இறந்த நிலையில் தங்கை, தாயுடன் வசித்து வருவதாகவும் பிளஸ் 2 வரையில் படித்துள்ளேன் என்றும் கூறியுள்ளார்.
பின்னர் என்ன வேண்டும் எனக் கேட்டபோது தனி ஒருவன் திரைப்படத்தில் வரும் கதையைப் போல, தனது உடம்பில் யாரோ மெமரி சிப் வைத்துத் தைத்துள்ளனர். அதன் மூலமாக யாரோ என்னை கண்காணிக்கின்றனர். ஆகவே அந்த ’சிப்”பை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும். அதற்காக வீட்டில் இருந்த தங்கையின் நகையை வங்கியில் அடகு வைத்து ரூ.20 ஆயிரம் கொண்டு வந்துள்ளேன் என்று கூறியுள்ளார். . அதனைக் கேட்ட எஸ்.பி. அந்த இளைஞர் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதை அறிந்தார். .
பின்னர், மாவட்டக் குற்றப்பிரிவு டி.எஸ்.பி. வீமராஜிடம் அந்த இளைஞரைப் பாதுகாப்பாக ரூ.20 ஆயிரம் பணத்துடன் வீட்டிற்கு அனுப்ப உத்தரவிட்டதுடன் அந்த இளைஞருக்கு மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த இளைஞரை இன்று விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உள்ள மனநல மருத்துவரை சந்திக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT