Published : 23 Aug 2023 07:32 AM
Last Updated : 23 Aug 2023 07:32 AM

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகாரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்று (ஆக.23) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் 23-ம் தேதி (இன்று) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 24-ம் தேதி முதல் 28-ம்தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், சென்னை கலங்கரைவிளக்கத்தில் 4 செ.மீ., திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 3 செ.மீ., சேலம் மாவட்டம் தலைவாசல், ஈரோடு மாவட்டம் பவானி, செங்கல்பட்டில் தலா 2 செ.மீ. மழை பதிவானது.

இதற்கிடையே, சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு இடங்களில் நேற்று காலை மிதமான மழை பெய்தது. கீழ்ப்பாக்கம், எழும்பூர், நுங்கம்பாக்கம், அமைந்தகரை, கோயம்பேடு, வளசரவாக்கம், கே.கே.நகர், சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x