Published : 22 Aug 2023 10:07 PM
Last Updated : 22 Aug 2023 10:07 PM

தருமபுரி | மாற்றுத்திறன் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - விவசாயிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறன் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த விவசாயிக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.

பென்னாகரத்தைச் சேர்ந்த பழனி என்பவரின் மகன் கோவிந்தராஜ் (34). அதே பகுதியைச் சேர்ந்தவர் 16 வயதுடைய பேச இயலாத மாற்றுத் திறன் கொண்ட சிறுமியை விவசாயியான கோவிந்தராஜ் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு கோவிந்தராஜை கைது செய்தனர். இந்த வழக்கு தருமபுரி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக வி.கல்பனா ஆஜராகி வந்தார். வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று(ஆகஸ்ட் 22) தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றச்சாட்டுக்கு உள்ளான கோவிந்தராஜுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் வழங்கி நீதிபதி சையத் பர்கத்துல்லா உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x