Published : 22 Aug 2023 12:09 PM
Last Updated : 22 Aug 2023 12:09 PM

விதிகளை மீறி டிஎன்பிஎஸ்சி தலைவர், உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க முயற்சி: டிடிவி தினகரன் கண்டனம்

சென்னை: "வேலைவாய்ப்புக்கான தேர்வை எதிர்பார்த்து லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில், விதிகளை மீறி டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க முயற்சிக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி நியமனம் தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளதாக ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.

டிஎன்பிஎஸ்சி பதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட நபர்கள் எந்த அடிப்படையில் இறுதி செய்யப்பட்டனர்? உறுப்பினர்கள் தேர்வில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் முறைப்படி பின்பற்றப்பட்டதா? போன்ற கேள்விகளை ஆளுநர் எழுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது

திமுக ஆட்சியமைந்த பிறகு டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி காலியிடமாக இருப்பதால் அந்த ஆணையம் நடத்தும் தேர்வில் அடிக்கடி குளறுபடிகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

வேலைவாய்ப்புக்கான தேர்வை எதிர்பார்த்து லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில், விதிகளை மீறி தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க முயற்சிக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்

ஆளுநர் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு உரிய விளக்கங்களை உடனடியாக வழங்கி, அவரின் ஒப்புதலை பெற்று காலியாக உள்ள டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளை முறைப்படி நிரப்ப திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

முன்னதாக, டிஎன்பிஎஸ்ஸி (தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய) தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். | விரிவாக வாசிக்க > டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம் தொடர்பான கோப்புகளை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பியது ஏன்?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x