Published : 23 Jul 2014 09:06 AM
Last Updated : 23 Jul 2014 09:06 AM
வழக்கறிஞர் ஆணையரை தவறாக நடத்தியவருக்கு ஒரு வாரம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
செந்தில் பிரபு என்பவரது காரை பறிமுதல் செய்வதற்காக வழக்கறிஞர் ஆணையர் கவிதா சுப்ரமணியம் உயர் நீதிமன்ற ஆணையுடன் சென்றுள்ளார். அப்போது, வழக்கறிஞர் கவி தாவை தரக்குறைவாகவும், சட்டவிரோதமாகவும் செந்தில் பிரபு நடத்தியதாக தெரிகிறது.
இந்நிலையில் செந்தில் பிரபு வின் நடவடிக்கைகள் குறித்து கவிதா சுப்ரமணியம் உயர் நீதி மன்றத்தில் ஓர் அறிக்கையாக சமர்ப்பித்தார். அந்த அறிக் கையில், உயர் நீதிமன்ற ஆணையை செந்தில் பிரபு மதிக்க வில்லை. மேலும், காரை பறிமுதல் செய்ய சென்ற தன்னையும் அவர் சட்டவிரோதமாக நடத்தி னார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வழக்கு பல முறை விசாரணைக்கு வந்தபோதும், செந்தில் பிரபு நேரில் ஆஜராக வில்லை. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி எம்.துரைசாமி முன்பு செவ்வாய்க்கிழமை விசார ணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, உயர் நீதிமன்ற ஆணையை மதிக்காமலும், நீதிமன்றம் நியமித்த அதிகாரியை மதிக் காமல் தவறாக நடந்துகொண்ட செந்தில் பிரபு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன், அவருக்கு ஒரு வாரம் சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT