Published : 19 Aug 2023 07:42 PM
Last Updated : 19 Aug 2023 07:42 PM

மதுரை - குருவாயூர் - மதுரை எக்ஸ்பிரஸ்: 3 விரைவு ரயில்கள் ஒற்றை ரயிலாக இணைப்பு

மதுரை தற்போது தினசரி இயக்கப்பட்டு வரும் குருவாயூர் – புனலூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ், மதுரை - செங்கோட்டை - மதுரை எக்ஸ்பிரஸ், செங்கோட்டை - கொல்லம் - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, மதுரை - குருவாயூர் - மதுரை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ஒரே ரயிலாக, மதுரைக்கும், குருவாயூருக்கும் இடையே இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்தப் புதிய ரயில் மதுரையிலிருந்து வரும் 27-ம்தேதி அன்றும், குருவாயூரிலிருந்து 28-ம் தேதியன்றும் தனது சேவையைத் தொடங்கும். ரயில் எண். 16327 மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ், மதுரையில் இருந்து 27-ம் தேதி பகல் 11.20 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 2.10 மணிக்கு குருவாயூரை அடையும்.
மறுமார்க்கத்தில், ரயில் எண். 16328 குருவாயூர் - மதுரை எக்ஸ்பிரஸ், குருவாயூரிலிருந்து 28-ம் தேதி காலை 5.50-க்கு புறப்பட்டு, அன்று இரவு 7.50-க்கு மதுரை சென்றடையும்.

இந்த ரயில், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம், கோட்டயம், திருச்சூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x