Published : 04 Jul 2014 09:00 AM
Last Updated : 04 Jul 2014 09:00 AM
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டி டங்கள் மற்றும் ஓராண்டுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி கட்டிடங்களை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும அதிகாரிகள் (சிஎம்டிஏ) வியாழக்கிழமை காலை முதல் இரவு வரை தொடர்ந்து ஆய்வு செய்தனர்.
சென்னை மவுலிவாக்கம் பகுதி யில் கட்டப்பட்டு வந்த 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய கட்டிட விபத்தாக இது அமைந்துவிட்டது.
சென்னையில் கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கும்போதும், அது கட்டி முடிக்கப்படும்போதும் மட்டும் அவற்றை கண்காணிக்க நடை முறை உள்ளது. ஆனால், கட்டிடம் கட்டப்படும்போதே அது தரமானதாக அமைகிறதா என்பதை ஆராய வழி வகைகள் இல்லை என்ற கருத்து நிலவுகிறது. இந்நிலையில் இது போன்ற விபத்துகள் எதிர்காலத்தில் நிகழ்வதைத் தடுக்கும் நோக்கில், தமிழக அரசு உத்தரவின் பேரில் சென்னை நகரில் உள்ள அடுக்கு மாடிக் கட்டிடங்களில் சோதனை மேற் கொள்ள சிஎம்டிஏ திட்டமிட்டது. இதில், சென்னைமற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது கட்டிட அனுமதி வழங்கப்பட்டு கட்டப்படும் புதிய கட்டிடங்கள் மற்றும் கடந்த ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்பட் டதற்கான சான்றிதழ் பெற்ற 700 அடுக்குமாடிக் கட்டிடங்களை சோதனை செய்ய முடிவெடுக்கப் பட்டது.
இந்த சிறப்பு சோதனை வியாழக் கிழமை காலை தொடங்கியது. முதல்நாளில் 18 குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. ஒவ்வொரு குழுவுக்கும், நகரின் ஒவ்வொரு பகுதியில் சோதனை செய்யும் பணி ஒதுக்கப்பட்டது.
இந்த குழுவினர் அண்ணா நகர், நுங்கம்பாக்கம், தாம்பரம், பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்கு கடற் கரை சாலை போன்ற பல்வேறு பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டு வரும் சிறப்புப் பிரிவு கட்டிடங்கள் (4 மாடி கட்டிடங்கள்) மற்றும் பன்னடுக்கு கட்டிடங்களில் ஆய்வு செய்தனர். கட்டுமானப் பணி தொடக்க நிலையில் உள்ள கட்டிடங்களில் “செட்பேக்” விதிமுறைகள் (கட்டி டத்தை சுற்றிலும் விதிமுறைகளுக்கு உட்பட்டு காலியிடம் விடுதல்) பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை அக்குழுவினர் ஆய்வு செய்தனர். மேலும், ஓராண்டுக்குள் கட்டி முடிக் கப்பட்ட கட்டிடங்கள் மற்றும் பாதி முடிந்த நிலையில் உள்ள கட்டிடங் களிலும் கட்டுமானத்தில் குறைபாடு கள் உள்ளனவா, அங்கு கட்டுமான விதிமுறைகள் கடைபிடிக்கப்பட் டுள்ளனவா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இச்சோதனை சில இடங்களில் இரவு 7 மணி வரை நடைபெற்றது. இந்த சோதனை நடவடிக்கை தொடர்ந்து வெள்ளிக்கிழமையும் நடைபெறும் என்று சிஎம்டிஏ வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT