Published : 14 Aug 2023 06:15 AM
Last Updated : 14 Aug 2023 06:15 AM
சென்னை: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான 1,016 பேர் கொண்ட பட்டியலை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: கடந்த ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்குத் தகுதியான நபர்களின் உத்தேசப் பட்டியல் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டது. அந்த பட்டியலில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு தற்போது பதவி உயர்வுக்கான இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் 1,016 ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர். அதன் விவரங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அது சார்ந்த தொடர் நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.
இதற்கிடையே, தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு அதற்கான ஆணைகள் விரைவில் வழங்கப்பட உள்ளதாக துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT