Published : 14 Aug 2023 06:25 AM
Last Updated : 14 Aug 2023 06:25 AM
சென்னை: ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி வரும்25-ம் தேதிதலைமைச் செயலகம் நோக்கி பேரணிநடத்தப்படும் என ஆட்டோ ஓட்டுநர்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஆட்டோ - டாக்சி தொழிலாளர் சங்க (சிஐடியு) நிர்வாகிகள் கூறியதாவது: 2013-ல் 1.8 கி.மீ. தொலைவுக்கு ரூ.25, அடுத்த ஒவ்வொரு கி.மீ.க்குரூ.12, காத்திருப்பு கட்டணம் 5 நிமிடங்களுக்கு ரூ.3.50, இரவு நேரத்தில் இந்த கட்டணத்தை இரட்டிப்பாக வசூலிக்க அனுமதி ஆகியவை தொடர்பாக போக்குவரத்துத் துறை உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், அரசு சார்பில் மீட்டர் வழங்காத காரணத்தால், கட்டண உயர்வுஅமல்படுத்தப்படவில்லை. மேலும்,தற்போது பெட்ரோல் விலை ரூ.100-ஐகடந்து விட்டது. அன்றாடம் பயன்படுத்தக் கூடிய அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.
அன்றாட எரிபொருள் விலைக்கு ஏற்ப மீட்டர் கட்டணத்தை நிர்ணயிக்குமாறு உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில்பெறப்பட்ட கருத்துகளை போக்குவரத்துத் துறை, அரசிடம் சமர்ப்பித்துள்ளது. ஆனால், 10 மாதங்களுக்கு மேலாகியும் நடவடிக்கை இல்லை.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்திப் பல்வேறு போராட்டங்களை நடத்தியும், அரசு செவிசாய்க்கவில்லை. எனவே, வரும் 25-ம் தேதி தலைமைச் செயலகம் நோக்கி பேரணி நடத்த உள்ளோம். புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது, ஆன்லைன் அபராதத்திலிருந்து ஆட்டோவுக்கு விலக்க அளிக்க வேண்டும், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மீட்டர் கட்டணத்தைஉயர்த்த வேண்டும், பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும், புதிதாக ஆட்டோ வாங்குவோருக்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. அதற்குப் பின்னரும்அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT