Published : 10 Aug 2023 04:56 AM
Last Updated : 10 Aug 2023 04:56 AM

தாம்பரம் - நெல்லை இடையே சிறப்பு ரயில்

சென்னை: தாம்பரத்தில் இருந்து ஆக.11-ம் தேதி மாலை 5 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06051) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு நெல்லையை அடையும்.

மறுமார்க்கமாக, நெல்லையில் இருந்து ஆக.12-ம் தேதி மாலை 5.50 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06052) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

இந்த ரயில் செங்கை, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x