Last Updated : 03 Nov, 2017 08:56 AM

 

Published : 03 Nov 2017 08:56 AM
Last Updated : 03 Nov 2017 08:56 AM

அச்சப்படத் தேவையில்லை; சென்னையில் இன்று மிதமான மழையே இருக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் நேற்றிரவு விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. நுங்கம்பாக்கம், தரமணி பகுதிகளில் 19 செ.மீ., மழை பெய்தது. இதனால், 2015 பெருமழை போல் இப்போதும் நடந்துவிடுமோ என சென்னைவாசிகள் பலரும் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில், சென்னை மழை நிலவரம் குறித்து வானிலை ஆர்வலரும் பதிவருமான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்(https://www.facebook.com/tamilnaduweatherman/) தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

"நேற்று தொடங்கிய பலத்த மழை முடிவுக்கு வந்துவிட்டது. மழை தரும் பெரும் மேகக்கூட்டங்கள் சென்னை கரையைவிட்டு விலகியே நிற்கின்றன. அச்சப்படத் தேவையில்லை. கரையை நெருங்க நெருங்க மேகக்கூட்டங்கள் சிதறும் நிலையே தென்படுகிறது. கரையை நெருங்கும்போது வலுவான மேகக்கூட்டங்கள் எல்லாம் (Stratiform clouds) என்ற அடுக்கியல் வடிவம் கொண்ட மேகக்கூட்டங்களாகவே மாறுகின்றன. இத்தகைய மேகங்களால் மிதமான மழை மற்றும் தூரல்களுக்கே வாய்ப்பிருக்கிறது. இதில் ஏதாவது மாற்றமிருந்தால் உங்களுக்கு உடனே தெரிவிக்கிறேன்.

இப்போதைக்கு சென்னையில் கனமழைக்கு வாய்ப்பில்லை. வெயில் அடித்தாலும்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. அதேவேளையில், காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் சென்னைக்கு மழை முடிந்துவிட்டது எனக் கூறிவிடமுடியாது"

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x