Published : 10 Jul 2014 11:12 AM
Last Updated : 10 Jul 2014 11:12 AM
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நலமாக இருப்பதாக அக்கட்சியின் நிர்வாகி தெரிவித்துள்ளார்.
திடீர் உடல்நலக்குறைவு காரண மாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, செவ்வாய்க்கிழமை இரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து, மதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சித் தலைமை அலுவலகத்துக்கு போன் செய்து விசாரிக்கத் தொடங்கினர்.
இந்நிலையில், மதிமுக இணைய தளப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் முகமது அலி வெளியிட்டுள்ள அறிவிப் பில், ‘வைகோ வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றார். பரிசோதனை முடிந்து அவர் வீடு திரும்பிவிட்டார்' என்று கூறியுள்ளார்.
விஜயகாந்த் திடீர் உடல்நலக்குறைவு
தேமுதிக தலைவர் விஜயகாந்த், கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட் டங்களுக்கு சென்று ‘உங்களுடன் நான்’ என்ற நிகழ்ச்சி மூலம் தொண்டர்களை சந்தித்து பேசினார்.
இந்நிலையில் விஜயகாந்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு திடீரென நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டது. இதை யடுத்து அவர் புதன்கிழமை காலை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சோ உடல்நிலை முன்னேற்றம்
துக்ளக் ஆசிரியர் சோ ராம சாமி, உடல் நலக்குறைவு காரண மாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல் நிலையில் சற்று முன்னேற் றம் ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் புதன்கிழமை இரவு தெரிவித்தனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT