Published : 06 Aug 2023 06:46 AM
Last Updated : 06 Aug 2023 06:46 AM
சென்னை: ராகுல் காந்தியின் எம்.பி பதவி இழப்பு வழக்கில் பாஜகவின் சூழ்ச்சி உச்ச நீதிமன்றத்தில் வீழ்ந்து விட்டதுஎன்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘மோடி என்ற குடும்பப் பெயர் உள்ளவர்கள் திருடர்களாக இருப்பது எப்படி?' என்று 2019-ம் ஆண்டு கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தின்போது ராகுல் காந்தி பேசியதற்கு எதிராக, குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது சூரத் நீதிமன்றம். மறுநாளே ராகுல் காந்தியின் எம்.பி பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சூரத் நீதிமன்றத்தையும், குஜராத் உயர்நீதிமன்றத்தையும் ராகுல் காந்தி அணுகினார். அவரது மேல்முறை யீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார்.
இவ்வழக்கில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ‘‘இந்திய தண்டனைச் சட்டம் 499-வது பிரிவின் கீழ், அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்க முடியும். அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததற்கான தகுந்த காரணத்தை சூரத் நீதிமன்ற நீதிபதி தெரிவிக்கவில்லை. 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8(3)-வது பிரிவின்படி தகுதி நீக்கம் தானாகச் செயல்பாட்டுக்கு வரும் என்ற நோக்கத்தில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.
பாஜகவின் நோக்கம்: நாடாளுமன்றத்தில் அதானிக்கும் மோடிக்கும் என்ன உறவு? என்று எழுப்பிய ஒற்றைக் கேள்விதான் ராகுல் காந்தியின் பதவிபறிபோகக் காரணமாக அமைந்தது. நாடாளுமன்றத்தில் கேள்வி களால் துளைத்தெடுக்கும் ராகுல்காந்தியின் எம்.பி பதவியைப் பறிப்பது ஒன்றுதான் இவர்கள் நோக்கம்என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட் டின. அது உண்மை என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. பாஜகவின் சூழ்ச்சி உச்ச நீதிமன்றத்தில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT