Published : 06 Aug 2023 06:56 AM
Last Updated : 06 Aug 2023 06:56 AM

மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜகவினர் எதையும் செய்வார்கள் - திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜகவினர் எதையும் செய்வார்கள். எனவே, தடைகளை சமாளித்து நாம் முழுமையான வெற்றியைப் பெற வேண்டும் என்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக மாவட்டச் செயலாளர்கள்கூட்டம், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின்பொதுச்செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், பொருளாளரும், நாடாளுமன்றஉறுப்பினருமான டி.ஆர்.பாலு மற்றும் துணைப் பொதுச்செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைமை நிர்வாகிகள் பங்கேற் றனர்.

இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நம்மை எல்லாம் ஆளாக்கிய மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைசிறப்பாக கொண்டாடுவதற்காகத்தான் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. அனைத்து மாவட்டச் செயலாளர்களும், அணிகளின் செயலாளர்களும் இணைந்து நிகழ்ச்சிகளைநடத்துவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். அவருக்குப் புகழ் சேர்க்கும் விழாவாக, பெருமை சேர்க்கின்ற விழாவாக கொண்டாட வேண்டும்.

கவனத்தை ஈர்க்க வேண்டும்: அரசு சார்பிலும் விழாக்கள் நடத்தப் போகிறோம். நூற்றாண்டு விழா என்று சொல்கிறோம் என்றால், அதுவும் தேர்தல் பரப்புரையில் ஓர் அங்கம்தான். அவரது பெயரைச் சொல்லி பொதுமக்களின் கவனத்தை நம்மை நோக்கி ஈர்த்தாக வேண்டும். அவரால் பயன்பெறாத தரப்பினரே இல்லை. அதனால், அந்த அடிப்படையில் கொள்கை விழாக்களாக இவற்றை நடத்த வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலுக்குநாம் இப்போதே தயாராகிவிட்டோம். வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40-க்கு 40 இடங்களையும் திமுக தலைமையிலான கூட்டணிகைப்பற்றும் வகையில் நம்முடையபரப்புரையை தொடங்கியிருக் கிறோம். அதன் ஒருபகுதியாக, வாக்குச்சாவடிதோறும் களப்பணியாற்றும் வகையில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமிக் கப்பட்டிருக்கிறார்கள்.

ஒற்றுமை அவசியம்: வாக்குச்சாவடி பொறுப்பாளர் களை தேர்தலுக்கு ஆயத்தப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மண்டலமாக பயிற்சிக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதன்படி ஒவ்வொரு மண்டலமாக பயிற்சி பாசறைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. வரும் 17-ம் தேதி தென்மண்டல மாவட்டங்களுக்கான பயிற்சிப் பாசறைக் கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெறவுள்ளது.

நம் மீது பாஜகவுக்கு கோபம்: ஒவ்வொரு வாக்குச்சாவடி குழு|விலும் தங்களுக்குரிய முரண்பாடு|கள் எதுவும் இல்லாமல், ஒற்றுமையாக வேலை செய்கிற வகையில் எல்லா செயல்பாடுகளும் இருக்கவேண்டும். டெல்டா மாவட்டங்களில் பாசறைக் கூட்டம் முடிந்துவிட்டதால், அந்த மாவட்டங்களில் ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக வாக்காளர்களின் விவரங்களைச் சேகரிக்கும் பணி மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை சரிபார்க்கும் வேலையை உடனடியாக தொடங்க வேண்டும்.

பாஜகவைப் பொறுத்தவரை இது அவர்களுக்கு வாழ்வா சாவாஎன்ற தேர்தல். மீண்டும் ஆட்சியைப் பிடிக்க எதையும் செய்வார்கள். தமிழகத்தில் அவர்கள் எடுக்கின்ற முயற்சிகள் எல்லாம் தோல்வி அடைந்து இருக்கிறது. அதனால் கோபம் அதிகமாகும். நம்மை நோக்கிப் பாய்வார்கள்.

கடந்த காலங்களில், இதுமாதிரி பல தடைகளை சமாளித்துத்தான் நம்முடைய கட்சி வெற்றி பெற்று இருக்கிறது. இந்த முறையும் நாம் முழுமையான வெற்றியைப் பெறவேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

நிர்வாகிகள் செயல்பாடு - ஸ்டாலின் எச்சரிக்கை: மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் சிலரின் செயல்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டித்தார். அவர் பேசும்போது, ‘‘சில மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகளுக்குள் ஒற்றுமை இல்லையென்ற தகவல் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. இது உங்களுக்கும், கட்சிக்கும் நல்லதல்ல. குறிப்பாக, பொதுமேடைகளில் சண்டை போடும் காட்சிகளை வாட்ஸ்அப்பில் நானே பார்த்திருக்கிறேன்.

தென்காசியில் மாவட்டச் செயலாளருக்கும், ஊராட்சி பெண் தலைவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அனைத்து மீடியாக்களும் இருக்கும்போது, ஆர்ப்பாட்ட மேடையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதனால்தான் அந்த மாவட்டச் செயலாளர் மாற்றப்பட்டார். இதேபோல், சில அமைச்சர்களும் பொதுமேடையில் மீடியாக்கள் இருக்கும்போது மோதல் போக்கை கடைபிடிக்கின்றனர்.

கட்சி எல்லா தொண்டர்களுக்கும் பொதுவானது. நிர்வாகிகளுக்கு மட்டும் சொந்தம் இல்லை. இந்த ஆட்சி அனைவருக்கும் பொது வானது. அமைச்சர்கள், எம்எல்ஏ.க்களுக்கு மட்டும் சொந்தமானது இல்லை. ஆட்சியைப் பிடிக்க கட்சி பயன்பட வேண்டும். கட்சியைப் பலப்படுத்த ஆட்சி துணை புரிய வேண்டும். அதற்கு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைமை நிர்வாகிகள், அணிச் செய லாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் உட்பட அனைவரும் ஒற்றைச் சிந்தனையுடன், ஒருவருக்கொருவர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x