Published : 05 Aug 2023 06:28 AM
Last Updated : 05 Aug 2023 06:28 AM
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், வரும் 9, 10-ம் தேதிகளில் சில இடங்களிலும் லேசானதுமுதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஆக. 5) சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி முதல் 104டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும். சில இடங்களில் வழக்கத்தைவிட 4 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT