Published : 04 Aug 2023 05:13 AM
Last Updated : 04 Aug 2023 05:13 AM
சென்னை: புகார்களைத் தடையின்றி பதிவுசெய்ய வெளிநாடுவாழ் இந்தியர் களுக்கான பிரத்யேக செயலியை தமிழ்நாடு காவல் துறை அறிமுகம் செய்துள்ளது. இது இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.
இதுதொடர்பாக தமிழககாவல்துறை தெரிவித்துள்ளதாவது:
வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் குறைகளைத் தீர்த்து வைப்பதற்காக, சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள காவல்துறை தலைமை அலு வலகத்தில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் பிரிவு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது.
வெளிநாடுவாழ் இந்தியர்கள் மின்னஞ்சல் வாயிலாகவும், நேரடியாகவும் தங்களது புகார் மனுக்களை இப்பிரிவுக்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், வெளிநாடுவாழ் இந்தியர்களின் புகார்களைத் தடையின்றிபதிவு செய்வதற்கு ஏதுவாக,காவல்துறை சார்பில் வெளி நாடுவாழ் இந்தியர்களுக்காக பிரத்யேக செயலி உருவாக்கப் பட்டுள்ளது.
அந்தவகையில், இந்த செயலி இன்று முதல் பயன்பாட்டு வரஇருப்பதாகவும், தமிழக காவல்துறையின் http://eservices.tnpolice.gov.in/) என்ற இணையதள முகவரியில் இருந்து இந்த செயலிக் கான இணைப்பை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.
இந்த செயலியில் புகார்தாரர், மனுவின் தற்போதைய நிலையை அறிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், புகார் மனுக்கள் தொடர்பான அறிக்கைகளை இச்செயலி மூலம் தேதி வாரியாகவும், நாடு வாரியாகவும், புகாரின் வகை வாரியாகவும் புகார் மனுக்கள் மீதான நிலைமை வாரியாகவும் பல்வேறு அறிக்கைகளாக பெற்றுக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT