Published : 02 Aug 2023 01:12 PM
Last Updated : 02 Aug 2023 01:12 PM
சென்னை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டுக்காக ரூ.23.84 கோடி மதிப்பிலான 253 வாகனங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2023-24ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கள அலுவலர்கள், செயல்படுத்தப்படும் பணிகளின் தரத்தை கண்காணிக்கவும், உரிய காலத்தில் முடித்திடுவதை உறுதி செய்யவும் கள ஆய்வு மேற்கொள்ளவும் பணிகளை திறம்பட கண்காணிக்கவும் ஏதுவாக புதிய வாகனங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் பணிகளை திறம்பட கண்காணிக்கும் வகையில், 23 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பிலான 253 வாகனங்களை மாவட்ட ஆட்சித் தலைவர்கள், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர்கள், செயற் பொறியாளர்கள், உதவி செயற் பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் வகையில், அவ்வாகனங்களுக்கான சேவையினை சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்து, வாகனங்களுக்கான சாவிகளை அலுவலர்களிடம் வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT